e martë, 16 shtator 2008

24,600 பேரை வீட்டுக்கு அனுப்புகிறது ஹெச்.பி

சான்பிரான்சிஸ்கோ : உலகின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான ஹேலட் - பேக்கார்டு ( ஹெச்.பி.), உலகம் முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 24,600 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தை சேர்ந்த பிசினஸ் சர்வீஸ் அவுட்சோர்சிங் நிறுவனமான எலக்ட்ரானிக் டேட்டா சிஸ்டத்தை ( இ.டி.எஸ். ) கடந்த மாதத்தில் ஹெச்.பி., வாங்கியது. இப்போது அந்த இரு கம்பெனிகளையும் ஒன்றாக இணைக்கும் வேலை நடந்து வருகிறது. இதனையடுத்து இன்னும் மூன்று வருடங்களில் ஹெச்.பி., நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் 24,600 பேரை குறைக்க அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஐ.பி.எம்., நிறுவனத்திற்கு போட்டியாக களம் இறங்கும் நோக்கத்தில் ஹெச்.பி.,நிறுவனம், ஆகஸ்ட் மாதத்தில் இ டி எஸ் என்ற எலக்ட்ரானிக் டேட்டா சிஸ்டத்தை 13.9 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த இரண்டு நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்கும் போது ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டியது அவசியமாகிறது என்று சொல்லும் ஹெச்.பி., அதிகாரிகள், இதன் மூலம் வருடத்திற்கு 1.8 பில்லியன் டாலர் மிச்சமாகும் என்கின்றனர். இதன் மூலம் மிச்சமாகும் தொகையை கம்பெனியின் வளர்ச்சிக்காக செலவு செய்யவும் அது முடிவு செய்திருக்கிறது. பெரும்பாலும் அமெரிக்காவில் பணிபுரிபவர்கள்தான் வீட்டுக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள். 80 நாடுகளில் அலுவலகங்கள் வைத்திருக்கும் ஹெச்.பி.நிறுவனத்தில் இப்போது சுமார் 2,10,000 பேர் வேலை செய்கிறார்கள். வருடத்திற்கு 38 பில்லியன் டாலர் வருமானம் வருகிறது.

Nuk ka komente: