லேமன் பிரதர்ஸ் சொத்துக்களை வாங்க முன்வந்துள்ளது பார்க்ளேஸ் பேங்க்
src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
| நியுயார்க் : திவால் நோட்டீஸ் கொடுத்திருக்கும் லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் வட அமெரிக்க இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் பிசினஸ் மற்றும் கேப்பிடல் மார்க்கெட் பிசினசை வாங்கிக்கொள்ள பிரிட்டனின் பார்க்ளேஸ் பாங்க் முன் வந்துள்ளது. ஆனால் லேமன் பிரதர்ஸ் திவால் நோட்டீஸ் கொடுத்திருப்பதால் கோர்ட் மூலமாகத்தான் இதை வாங்க முடியும். அவ்வாறு வாங்கி விட்டால் பின்னர் பார்க்ளேஸ் பேங்க், அமெரிக்காவின் மூன்றாவது மிகப்பெரிய முதலீட்டு வங்கியாக ஆகி விடும். லேமன் பிரதர்ஸின் சுமார் 40 பில்லியன் பவுண்ட்ஸ் ( 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ) மதிப்புள்ள டிரேடிங் அசட்களையும் 38 பில்லியன் டாலர் மதிப்புள்ள டிரேடிங் லயபிலிட்டியையும் பார்க்ளேஸ் பேங்க் வாங்கிக்கொள்கிறது. இது தவிர லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் நியுயார்க் தலைமை அலுவலகத்தையும் நியுஜெர்சியில் இருக்கும் அதன் இரண்டு டேட்டா சென்டர்களையும் 1.5 பில்லியன் டாலருக்கு பார்க்ளேஸ் பேங்க் வாங்கிக்கொள்கிறது. 158 வருட பாரம்பரியமிக்க லேமன் பிரதர்ஸ் நிறுவனம், திவால் அனதாக திங்கள் அன்று அறிவித்தது. நியுயார்க்கில் இருக்கும் ஃபெடரல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட திவால் நோட்டீசில், லேமன் பிரதர்ஸ்க்கு 639 பில்லியன் டாலருக்கு சொத்து இருப்பதாகவும் 613 பில்லியன் டாலருக்கு கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. |
Nuk ka komente:
Posto një koment